Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

சீருடைகள் / உடற்பயிற்சி ஆடைகள் மற்றும் எழுதுபொருட்கள் கடை:


இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க, இராணுவத் தலைமையக வளாகத்தில் 29 ஒக்டோபர் மாதம் 2020 அன்று இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றும் இராணுவ வீரர்களுக்கான நலன்புரி வசதியாக கிசோக் நிறுவப்பட்டது. பின்வரும் பொருட்கள் கிசோக் கடையில் இராணுவ வீரர்களுக்கு சலுகை விலையில் கிடைக்கும்

  • உடற்பயிற்சி உடைகள்
  • இராணுவ பொருட்கள் (தொப்பிகள், சின்னங்கள், லேன்யார்ட், சப்பாத்து போன்றவை)
  • எழுதுப்பொருட்கள்
  • பைகள் (பாடசாலை பைகள், பக்க பைகள் போன்றவை)
  • காலணிகள் (குழந்தைகள் காலணிகள், சாதாரண காலணிகள், பாடசாலை காலணிகள்
  • தண்ணீர் போத்தல்கள்
  • உடைகள்
  • பதாகைகள் & பரிசுப் பொருட்கள்

தியத்தலாவ ஷொப் ஒப் த கெரிசன் பல்நோக்கு வணிக வளாகம் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் மற்றுமொரு திட்டமாகும், மேலும் இந்த வசதியில் இராணுவ வீரர்களின் நலனுக்காக சலுகை விலையில் சீருடைகள்/உடற்பயிற்சி உடைகள் மற்றும் எழுதுபொருட்களை கொள்வனவு செய்ய முடிவதுடன் சலூன், மளிகைக் கடை மற்றும் ஒரு சிற்றுண்டிசாலையையும் கொண்டிருந்தது..