Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

தலைவி சேவை வனிதையர் பிரிவு


லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் இலங்கை இராணுவத்தின் 24 வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர், 2022 ஜூன் 03 ஆம் திகதி இராணுவ சேவை வனிதையர் பிரிவின் 16 வது தலைவியாக திருமதி ஜானகி லியனகே அவர்கள் பதவியேற்றார்.

திருமதி ஜானகி லியனகே அவர்கள் கஜபா படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியாகவும் பணியாற்றுகிறார். இராணுவத் தலைமையகத்தில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவராகப் பொறுப்புகளை ஏற்கும் முன்னர் அவர் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உப தலைவியாக பணியாற்றினார்.

மாத்தளை விஞ்ஞானக் கல்லூரியின் பழைய மாணவியான இவர், இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்

கஜபா படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி என்ற வகையில், இராணுவ வீரர்கள், ஊனமுற்ற போர்வீரர்கள் மற்றும் கஜபா படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி என்ற வகையில், இராணுவ வீரர்கள், ஊனமுற்ற போர்வீரர்கள், கஜபா படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணி உறுப்பினர்களின் குடும்ப அங்கத்தவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.

திருமதி. ஜானகி லியனகே
தலைவி இராணுவ சேவை வனிதையர் பிரிவு

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் கீழ் அனைத்து சேவை வனிதையர் உறுப்பினர்களையும் ஒருங்கிணைக்க முயற்சிக்கும் அதே வேளையில் சேவை வனிதையர் பிரிவின் விம்பத்தை முன்னிலைப்படுத்தவும் அவர் தீவிரமாக பங்களித்ததுடன் பொதுவான இலக்குகள் மற்றும் நலன்களுக்காகவும் பணியாற்றுகின்றார்.

அவரது தாய்மை பண்பானது அந்தத் துணைவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஆலோசனை அமர்வுகளின் போது நேரடி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வீரர்களின் உறவினர்களின் குறைகள் மற்றும் கவலைகளைத் தீர்க்க உதவுகிறது.

விதவைகள் மற்றும் ஊனமுற்ற கஜபா படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் அவர் தனிச்சிறப்பு வாய்ந்த அக்கறை காட்டினார், அவர்களின் தேவைகள் தனித்துவமானது மற்றும் வேறுபட்டது. வாழ்க்கைத் துணைவர் தேசியக் கடமைக்காக வெளியில் இருந்தபோது பிணைப்பு உறுதிப்பாட்டைக் கையாள்வதன் மூலம் அவர் ஒரு வீட்டு மனைவியின் பல பாத்திரங்களையும் பொறுப்புகளையும் உறுதியாகப் பராமரித்தார்.

கஜபா படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி என்ற முறையில் இந்த புதுமையான அணுகுமுறை கஜபா படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி குடும்பங்களில் உள்ள அனைத்து பெண்கள் மத்தியிலும் அற்புதமான குழு உணர்வை ஏற்படுத்தியது.

கஜபா படையணி மற்றும்இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி சேவை வனிதையர் பிரிவு கடந்த இரண்டு வருடங்களில் பகுதியளவு நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை நிறைவு செய்தல், புலமைப்பரிசில்கள் வழங்குதல், நிதி உதவி வழங்குதல், வைத்திய உதவிகள் போன்றவற்றுக்கு சாத்தியமான அதிகபட்ச ஆதரவை வழங்குவதில் முன்னணியில் உள்ளன. இதன் விளைவாக, அவர் தனது தொண்டு மற்றும் சமூகப் பணிகளுக்காக பலரால் பரவலாகப் பாராட்டப்படுகிறார்.

அவர் தனது புதிய அலுவலகத்தின் பொறுப்பை ஏற்று, அனைத்து இராணுவ வீரர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் அயராது, ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் சேவை செய்ய எதிர்பார்த்துள்ளார்.