Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

வீட்டுவசதி மற்றும் மருத்துவ உதவித் திட்டங்கள்:


இறந்த போர்வீரர்கள், ஊனமுற்ற போர்வீரர்கள், சேவையில் உள்ள அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்த வீடு, நிலம், கட்டுமானம் போன்றவற்றின் மூலம் அனைத்து வகையான உதவிகளையும் வழங்க மேற்கண்ட திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய வீடுகள், குளியலறைகள் மற்றும் பகுதியளவு கட்டப்பட்ட வீடுகளை முழுமைப்படுத்தல், மேலும், மிகவும் அத்தியாவசியமான வீட்டுப் பொருட்கள், தளபாடங்கள் மற்றும் அந்த வீடுகளுக்கான அத்தியாவசியப் பொருட்களும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் திட்டங்களால் வழங்கப்படுகின்றன.

அதேபோல், இந்தத் திட்டத்தின் ஊடாக அனைத்து மாற்றுத்திறனாளி போர்வீரர்களுக்கும் ஆரோக்கிய ஓய்வு விடுதிகளில் அல்லது அவர்களது வீடுகளுக்குச் சென்று சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், வெள்ளைக் பிரம்புகள், செயற்கைக் கருவிகள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை வழங்குகிறது. மேலும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளைக் கொண்ட இராணுவக் குடும்பங்களுக்கும் ஒரே பிரசவத்தில் இரட்டை அல்லது மூன்று குழந்தைகளை பெறும் குடும்பங்களுக்கு பன்முக வாழ்வாதார உதவிகளையும் வழங்குகின்றது.

மேலும், போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மனிதாபிமான உதவி அல்லது மிக அத்தியாவசியமான மருத்துவத் தேவைகள் ஏதேனும் அவசர அறுவை சிகிச்சைகள், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்குதல் மற்றும் அவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காகவும் உதவிகள் வழங்கப்படுகிறன. மேலும், குடும்ப உறுப்பினர்களிடையேயான தனிப்பட்ட பிரச்சனைகளை அந்தந்த படையணிகளின் ஊடாக தீர்க்க நிதி உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.