Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

04th May 2026 17:53:36 Hours

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையரின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு - 2026

இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமானது, இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையரின் தலைவி திருமதி. ஷிரானி நிர்மலின் விஜேகோன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவினால் 25 ஏப்ரல் 2026 அன்று படையணி தலைமையகத்தில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.என். விஜேகோன் என்டிசீ ஏஏடிஓ அவர்கள் இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையரின் தலைவியருடன் கலந்துகொண்டார்.

இந்த விழாவில் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளும் கலாசார நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன் மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.