Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

04th May 2026 11:27:28 Hours

இராணுவ சேவை வனிதையரால் கோட்டே ரஜமஹா விகாரையில் சூப் தானம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களின் மேற்பார்வையில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களின் பங்களிப்புடன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, 2026 மே 01 ஆம் திகதி அன்று கோட்டே ராஜமஹா விகாரை வளாகத்தில் சூப் தானம் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியின் போது, கோட்டை ராஜமஹா விகாரையில் நடைபெற்ற சில் அனுஷ்டான நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மற்றும் விகாரைக்கு வருகை தந்த ஏனைய பக்தர்கள் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கிரீம் கோன் சூப் வழங்கப்பட்டது. இந்த சூப் தானம், பொதுமக்களின் நலனுக்காக இந்த அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு பாராட்டத்தக்க சமூக சேவை முயற்சியாக வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.