01st May 2026 20:38:38 Hours
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ரந்திமா பெரேரா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவினர் அரநாயக்க பிரதேச செயலகம், 572 வது காலாட் பிரிகேட் மற்றும் 8 வது இலங்கை சிங்க படையணி ஆகியவற்றுடன் இணைந்து, 20 ஏப்ரல் 2026 அன்று அரநாயக்க பிரதேச செயலகத்தில் நன்கொடை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
இத்திட்டத்தின் போது, பாதிக்கப்பட்ட 88 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் மற்றும் ஆடைகள் விநியோகிக்கப்பட்டன. இந்த முயற்சிக்கு, ஆவுஸ்திரேலியா மெல்போர்னில் உள்ள டிரைகோ குழும நிறுவனங்களின் பிரதிநிதியான திரு. யசந்த டயஸ் அவர்களும், மெல்போர்னில் உள்ள இலங்கை சமூகத்தினரும் நிதியுதவி வழங்கினர்.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக பிரதி தளபதியும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எச்.டி.எல்.எஸ். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ, கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அரச அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.