29th April 2026 15:02:57 Hours
இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அஜந்தா டி சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மினுவாங்கொட ஆதார வைத்திசாலையின் தேவையை கருத்திற்கொண்டு இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவு மற்றும் 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணி வீரர்களுடன் இணைந்து, 26 ஏப்ரல் 2026 அன்று 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணி வளாகத்தில் இரத்ததான முகாம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
மினுவாங்கொட ஆதார வைத்தியசாலையின் மருத்துவக் குழுவினரின் பங்கேற்புடன், வைத்தியர் லக்மணி திலகசிறி அவர்களால் இந்த முகாம் நடத்தப்பட்டது.
இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.