Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

29th April 2026 14:53:50 Hours

இராணுவ சேவை வனிதையரால் வெலிசர தேசிய சுவாச நோய்கள் வைத்தியசாலைக்கு புதுப்பிக்கப்பட்ட ஒக்சிஜன் சிலிண்டர் தள்ளுவண்டிகள் நன்கொடை

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் வெலிசர தேசிய சுவாச நோய்கள் வைத்தியசாலைக்கு ஒக்சிஜன் சிலிண்டர் தள்ளுவண்டிகளைப் புதுபித்து கையளிக்கும் நிகழ்வை 27 ஏப்ரல் 2026 அன்று வைத்திசாலை வளாகத்தில் நடத்தினர்.

இந்த நிகழ்வில் முன்னர் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த 20 ஒக்சிஜன் சிலிண்டர் தள்ளுவண்டிகள் பழுதுபார்க்கப்பட்டு, வைத்தியசலையின் தொடர்ச்சியான பயன்பாட்டிற்காக நன்கொடையாக வழங்கப்பட்டன. இந்த முயற்சிக்கு திருமதி. ரீட்டா பிரான்ஸ் தாராளமாக நிதியுதவி வழங்கினார்.

இந்நிகழ்வில் தேசிய சுவாச நோய்கள் வைத்திசாலையின் மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் தம்மிக்க ரத்நாயக்க, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.