Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

28th April 2026 16:39:56 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் போஸ்கோ செவன சிறுவர் இல்லத்திற்கு சலவை இயந்திரம் நன்கொடை

இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் அப்பிரிவின் தலைவி திருமதி. சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 23 ஏப்ரல் 2026 அன்று, ஜா-எலா, உஸ்வெடகேயாவாவில் உள்ள போஸ்கோ செவன சிறுவர் இல்லத்திற்கு 12 கிலோ எடை கொண்ட முழு தானியங்கி சலவை இயந்திரம் ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.

பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காக நிறுவப்பட்ட பொஸ்கோ செவன சிறுவர் இல்லம், தற்போது சுமார் 50 சிறுவர்களுக்குத் தங்கும் வசதியுடன் கூடிய பராமரிப்பை வழங்கி வருகிறது. இந்நிகழ்ச்சியில் சிறுவர் இல்லத்தின் பணிப்பாளர் வண. அருட்தந்தை நிரோஷன், பொருளாளர் வண. அருட்தந்தை சுதேஷ், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.