17th April 2026 13:32:07 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 2026 ஏப்ரல் 11 ஆம் திகதி கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் பணியாற்றும் 31 சிவில் ஊழியர்களுக்கு தலா 10,000.00 ரூபாய் பெறுமதியான பரிசுப் பொதிகளையும் வவுசர்களையும் வழங்கியது.
58 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஏ. அபேவர்தன டபிள்யூபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.