17th April 2026 13:28:30 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனியைர் பிரிவு 2026 ஏப்ரல் 09 ஆம் திகதி இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியில் பணியாற்றும் சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் வவுசர்களை வழங்கியது.
இந்த நிகழ்ச்சியின் போது, ஒவ்வொரு சிவில் ஊழியருக்கும் இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் 5,000.00 ரூபாய் பெறுமதியன வவுச்சர் வழங்கப்பட்டது. மேலும், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ. 5,000.00 பெறுமதியான ஒரு சீஐபி (CIB) வவுச்சரையும், அதனுடன் சுமார் 2,000.00 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதியையும் வழங்கியது.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ. பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனியைர் பிரிவின் தலைவி திருமதி குமாரி பல்லேகும்புர, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.