15th April 2026 19:54:56 Hours
கொமாண்டோ படையணியின் 46வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவு 2026 மார்ச் 29 ஆம் திகதி கணேமுல்லை கொமாண்டோ படையணி மெரூன் லெகசி மண்டபத்தில் ஒரு நலத்திட்டத்தை நடாத்தியது.
இத்திட்டத்தின் போது, க.பொ.தா சாதாரண தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்து விளங்கிய 34 பிள்ளைகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன. மேலும் அண்மையில் நிகழ்ந்த ஒரு விபத்தில் மறைந்த சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரியின் மனைவியின் மருத்துவத் தேவைக்காக 100,000/- ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
மேலும், கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவு, விரு கெகுளு பாலர் பாடசாலைகளில் பயன்படுத்துவதற்காக இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவுகளுக்கு எழுதுபொருட்களை நன்கொடையாக வழங்கியது. மேலும் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கொமாண்டோ படையணி படையினர் மற்றும் சிவில் பணியாளர்களின் 750 சிறுவர்களுக்குப் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன. மேலும், விழாவின் போது 60 பரிசுப் பொதிகள் அடையாளப்பூர்வமாக வழங்கப்பட்டன.
போர் கருவி பணிப்பாளர் நாயகமும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ். விக்ரமரத்ன ஆர்எஸ்பீ, கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிப்பாய்கள் மற்றும் சிறுவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.