Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

15th April 2026 19:36:55 Hours

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையரால் போரில் வீரமரணமடைந்த ஒருவரின் குடும்பத்திற்கு புதிய வீடு

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு ஒரு புதிய வீட்டை நிர்மாணித்து, 6 வது கெமுனு ஹேவா படையணியின் வீரமரணமடைந்த வீரரின் தாயார் திருமதி திலகவதி மெணிக்கே அவர்களிடம் 2026 ஏப்ரல் 09 ஆம் திகதி குருநாகல், தொடங்கஸ்லந்த, லிஹினிவெஹரவில் வழங்கியது.

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷிஹானி அபேவர்தன மற்றும் 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஏ. அபேவர்தன டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ ஆகியோருடன் இணைந்து அந்த இல்லத்தை உத்தியோகப்பூர்வமாகத் திறந்து வைத்தனர்.

மேலும், அக்குடும்பத்தினர் தங்கள் புதிய வீட்டிற்கு குடிபெயர்வதற்கு உதவும் வகையில், அத்தியாவசிய சமையலறை உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இந்தத் திட்டத்திற்கு கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு நிதியுதவி வழங்கியதுடன், 4 வது கெமுனு ஹேவா படையணியினால் மனிதவள உதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.