29th March 2026 20:16:38 Hours
2026 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவு, பொல்ஹெங்கொடவிலுள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் பெப்ரவரி 21 ஆம் திகதி ஒரு நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த அமர்வில், பேராசிரியர் ஆர்.எஸ். ஜயவர்தன மற்றும் திருமதி கயானி ஹேரத் ஆகியோர் தனிநபர் நல்வாழ்வு மற்றும் தன்னை அழகுபடுத்திக்கொள்வது குறித்து விரிவுரைகளை வழங்கினர்.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இரோஷினி பெர்னாண்டோ, சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள், பெண் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்கு பற்றினர்.