11th March 2026 16:57:34 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் 2026 மார்ச் 10 அன்று ஆனைவிலுந்தவ கிராமிய வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்கள் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் போது, வைத்திய சிகிச்சை பெறும் நோயாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல அத்தியாவசிய வைத்திய பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. நன்கொடைகளில் 02 ஐ.சி.யூ படுக்கைகள், 01 பிஸ்டன் கம்ப்ரசர் நெபுலைசர், 02 ஒக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் நோயாளிகளின் அன்றாட தேவைகளுக்காக 20 படுக்கை விரிப்புகள் ஆகியவை அடங்கும்.
இந்த நன்கொடை திட்டத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.