10th March 2026 21:22:20 Hours
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவு, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிர்மலின் விஜயகோன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ போர் கருவி படையணி தலைமையகத்தில் 2026 மார்ச் 07 ஆம் திகதி ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடாத்தியது.
நிகழ்ச்சியின் போது, "அன்றாட ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த ஆரோக்கிய உபகரணங்களைப் பயன்படுத்துதல்" என்ற தலைப்பில் வைத்தியர் சந்திரிகா ராஜபக்ஷ அவர்களால் ஒரு சொற்பொழிவு நடாத்தப்பட்டது. இது உடல் மற்றும் மன நல்வாழ்வைப் பராமரிப்பது குறித்த மதிப்புமிக்க அறிவை வழங்கியது. இதனைத் தொடர்ந்து அழகு சிகிச்சைகள் பற்றிய அறிமுகம் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை இலக்காகக் கொண்ட நடைமுறை முகப் பயிற்சி அமர்வு, ஹெர்ப்லைன் (தனியார்) நிறுவனத்தால் நடாத்தப்பட்டது.
மேலும், கல்பத்த சுகிதா சிறுவர் இல்லத்திற்கு நன்கொடைகள் வழங்கப்பட்டன. இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.