10th March 2026 21:16:26 Hours
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு, இரத்தினபுரி மற்றும் குருவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் கெமுனு ஹேவா படையணி வீரர்களின் கர்ப்பிணி மனைவிகளுக்கு, 2026 மார்ச் 07 ஆம் திகதி கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவர் திருமதி ஷிஹானி அபேவர்தன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் ஒரு நன்கொடை திட்டத்தை நடாத்தியது.
இந்த நிகழ்ச்சியின் போது, ரூ.7,000.00 பெறுமதியான சத்துணவுப் பொதிகள் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.