10th March 2026 21:13:44 Hours
கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 2026 பெப்ரவரி 25 ஆம் திகதி அனுராதபுரம் அபிமன்சல 1 நல விடுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இந்த விஜயத்தின் போது, கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி சிறப்பு விருந்தினர்களுடன் இணைந்து, போர் வீரர்களுடன் உரையாடல்களில் ஈடுபட்டார். மேலும், நல விடுதியிலுள்ளவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.
அவர்களின் பயன்பாட்டிற்கான சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகளும் விநியோகிக்கப்பட்டன. அவர்களைப் பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ளும் வீரர்களுக்கு நன்கொடைப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், நிலையத்திற்கு 50 எல்ஈடி (LED) விளக்குகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் கஜபா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் யீ.கே.டி.டி.பீ. உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. உதாரி அனுபமா கமகே, கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.