Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

10th March 2026 20:57:05 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சிறப்பு மகளிர் தின கொண்டாட்டம் 2026 மார்ச் 08 ஆம் திகதி குக்குலேகங்க லயா லெஷர் வளாகத்தில் நடைபெற்றது. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.

நிகழ்வின் போது, பங்கேற்பாளர்களுக்காக பல பொழுதுபோக்கு விளையாட்டுகளும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு இணையாக, தற்போது இராணுவத்தில் பணியாற்றும் 15 கர்ப்பிணி பெண் அதிகாரிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன. பின்னர், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் சிறப்பு பரிசுகளும், அதைத் தொடர்ந்து மதிய உணவும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.