09th March 2026 21:43:09 Hours
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவு, அதன் பணியாளர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நன்கொடை வழங்கும் திட்டத்தை கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கணேமுல்ல கொமாண்டோ படையணி மெரூன்ஸ் லெகசி மண்டபத்தில் 2026 மார்ச் 02 ஆம் திகதி நடாத்தியது.
இந்த நிகழ்வில் இராணுவ போர் கருவி பணிப்பாளர் நாயகமும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ். விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் போது இறக்குமதி செய்யப்பட்ட, குழந்தை சத்துணவு பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான சுகாதாரப் பொருட்கள் 45 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் ஒரு சிவில் ஊழியர் இடையே விநியோகிக்கப்பட்டன. டிரைகோ குழும நிறுவனங்களின் மெல்போர்ன் முகவர் திரு. யசாந்த டயஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை குடிமக்கள் ஆகியோரால் விநியோகிக்கப்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.