09th March 2026 21:40:42 Hours
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவு, கொமாண்டோ படையணியின் உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் பொருட்களை வழங்குவதற்காக ஒரு சிறப்பு சந்தையை 2026 மார்ச் 01 ஆம் திகதி மெரூன்ஸ் லெகசி மண்டபத்தில், கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த முயற்சியின் மூலம், ஆடைகள், சுகாதாரப் பொருட்கள், சலவை பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள், தற்போதைய சந்தை விலைகளுடன் ஒப்பிடும்போது மிக குறைந்த விலையில் விற்கப்பட்டன. இலங்கையில் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொமாண்டோ படையணியின் உறுப்பினர்களுக்கான நலத்திட்டங்களை மேற்கொள்வதற்கு நிதி திரட்டுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நிகழ்வில் இராணுவ போர் கருவி பணிப்பாளர் நாயகமும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ். விக்ரமரத்ன ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.