Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

06th March 2026 09:58:41 Hours

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சிப்பாய்க்கு கட்டிய புதிய வீடு அவரது குடும்பத்தினரிடம் கையளிப்பு

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் ஒரு சிப்பாய்க்கு புதிதாக கட்டப்பட்ட வீடு, 2026 மார்ச் 04 ஆம் திகதி கல்கமுவ மஹாநன்னேரியாவில் அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ மற்றும் இராணுவ சேவை வனதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் போது, சேவை வனிதையர் பிரிவின் தலைவி பயனாளி குடும்பத்திற்கு மின்சார உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்கினார். மேலும், அப்பகுதியில் உள்ள 10 பாடசாலை பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.

பின்னர், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.கே.டபிள்யூ.டபிள்யூ.எம்.ஜே.எஸ்.பி.டபிள்யூ. பல்லேகும்புர மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி குமாரி பல்லேகும்புர ஆகியோர் இணைந்து புதிய வீட்டிற்குத் தேவையான தளபாடங்களை வழங்கினர்.

பங்கேட்பாளர்களிடையே உரையாற்றிய பயனாளியான சிப்பாய், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் வீட்டை வழங்கியதற்காக இராணுவம் மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவிற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.