05th March 2026 15:30:13 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு, இராணுவ புலனாய்வு படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாயகளின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு "ஆரோக்கியமான உடல் கொழுப்பு கட்டுப்பாடு" குறித்த பட்டறையை 2026 பெப்ரவரி 28 ஆம் திகதி நடாத்தியது.
இந்த நிகழ்வில் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தில்ருக்ஷி மெதகொட அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
விளையாட்டு அமைச்சின் விளையாட்டு மருத்துவ நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்தப் பட்டறை நடாத்தப்பட்டது. விளையாட்டு மருத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லால் ஏக்கநாயக்க, பங்கேட்பாளர்களுக்கு விளக்கமளித்தார்.
பயனுள்ள உடல் கொழுப்பு கட்டுப்பாடு குறித்த தத்துவார்த்த மற்றும் நடைமுறை அமர்வுகளில் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பங்கேற்பாளரும் உடல் கொழுப்பு மதிப்பீட்டை மேற்கொண்டனர். மேலும், நிபுணர் குழு கொழுப்பைக் குறைப்பதற்கான தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளையும் வடிவமைக்கப்பட்ட திட்டங்களையும் வழங்கியது.
இந்த நிகழ்வில் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் துணைவர்கள் கலந்து கொண்டனர்.