03rd March 2026 17:19:00 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசுப் பொதிகளை விநியோகிக்கும் மற்றும் இராணுவ வீராங்கனைகள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் 2026 பெப்ரவரி 26, அன்று இராணுவ தலைமையகத்தில் நடத்தியது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் போது, இலங்கை சமிக்ஞைப் படையணியின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரி ஒருவருக்கு புதிய வீடு கட்டுவதற்காக ரூ. 650,000.00 நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும், நான்கு இராணுவ வீரர்களுக்கும் இரண்டு சிவில் ஊழியர்களுக்கும் வீடு நிர்மாணிக்க நிதியுதவி வழங்கப்பட்டது. அதன்படி, தலா ரூ. 500,000.00 பெறுமதியான நான்கு மானியங்களும், தலா ரூ. 450,000.00 பெறுமதியான இரண்டு மானியங்களும் வழங்கப்பட்டன.
மேலும், தற்போது நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இராணுவ வீரர்களின் இரண்டு பிள்ளைகளின் வைத்திய சிகிச்சைக்காக தலா ரூ.100,000.00 மதிப்புள்ள இரண்டு நிதி மானியங்கள் வழங்கப்பட்டன. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய கருத்தின் கீழ், வீடுகள் இல்லாத வீரர்களுக்கு ரூ.1,500,000.00 பெறுமதியான வீடு கட்டுவதற்கான புதிய நிதி மானியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, வீட்டு மானியத்தின் இறுதி தவணை, ரூ.500,000.00 பெற்ற கொமாண்டோ படையணியின் சிப்பாய் ஒருவருக்கு வழங்கப்பட்டது. மேலும் இராணுவத்தில் பணியாற்றும் ஒரு சிவில் ஊழியருக்கு அவரது வீடு கட்டுவதற்கான இறுதி தவணையாக ரூ.150,000.00 வழங்கப்பட்டது.
மேலும், இறந்த ஒரு சிப்பாய், பணிபுரியும் சிப்பாய், ஒரு சிவில் ஊழியரின் குடும்பங்களுக்கு அவர்களின் சுயதொழில் முயற்சிகளை ஆதரிப்பதற்காக மூன்று தையல் இயந்திரங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. மேலும் கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட மூன்று மடிக் கணினிகள், சேவையில் இருக்கும் ஒரு சிப்பாயின் மூன்று மகள்கள் மற்றும் உயர் கல்வி பயிலும் இரண்டு சிவில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன.
பின்னர், இராணுவ கலாச்சார நடனக் குழு தாய்மையின் உணர்ச்சி சாரத்தை சித்தரிக்கும் ஒரு அழகான நடனத்தை நிகழ்த்தியது, இது அங்கு இருந்த அனைவரின் இதயங்களையும் தொட்டது. அதன் பிறகு, 146 கர்ப்பிணிப் பெண் சிப்பாய்களுக்கு மகப்பேறு உதவி மற்றும் உலர் உணவு பொதிகள் அடங்கிய பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.
அதன்படி, போர் வீரர்களின் நலனுக்காக மொத்தம் ரூ. 6,275,737.00 செலவிடப்பட்டது என்பது குறிப்பிடதக்கதாகும்.