Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

28th February 2026 17:25:10 Hours

கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவினால் மடிக்கணினி வழங்கும் நன்கொடை திட்டம்

கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவு 2026 பெப்ரவரி 12 ஆம் திகதி கணேமுல்லை மெரூன்ஸ் லெகசி மண்டபத்தில் மடிக்கணினி வழங்கும் நன்கொடை நிகழ்ச்சியை நடாத்தியது.

இந்திகழ்வின் போது, க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பேறு பெற்ற கொமாண்டோ படையணியினரின் பதினொரு பிள்ளைகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், அவர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன. இலங்கை யூடிஎஸ் கல்லூரியின் அதிபர் மற்றும் நிர்வாகத்தின் முயற்சியால் மடிக்கணினிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

மேலும், கொமாண்டோ படையணி தலைமையகம், கொமாண்டோ படையணி படையலகுகள், கொமாண்டோ படையணி பயிற்சி பாடசாலை மற்றும் கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவு ஆகியவற்றிக்கும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு போர் கருவி பணிப்பாளர் நாயகமும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ். விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது.

இலங்கை யூடிஎஸ் கல்லூரியின் அதிபர் திருமதி அலிசன் ஹிஸ்கொக்ஸ், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிள்ளைகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.