Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

26th February 2026 09:17:31 Hours

கொமாண்டோ படையணி சேவை வனிதையரால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள் நன்கொடை

மறைந்த கோப்ரல் ஏ.பி. தல்கஸ்பிட்டிய ஆர்எஸ்பீ அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அத்தியாவசிய வீட்டு உபகரணங்களும், அவரது பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு 2026 ஜனவரி 24 ஆம் திகதி கொமாண்டோ படையணி தலைமையகத்தில் நடைபெற்றது. 1 வது கொமாண்டோ படையணியின் மறைந்த அதிகாரவாணையற்ற அதிகாரி, செயற்பாட்டு கடமைகளில் ஈடுபட்டிருந்த போது பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்து பின்னர் அங்கவீனமுற்றார். தொடர்ந்து உடல்நலக் காரணங்களால் மருத்துவ ரீதியாக சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஓய்வு பெற்ற பின்னர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார்.

இந்த நலன்புரி முயற்சி, கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் செயற்குழு உறுப்பினர் திருமதி சம்பிகா பள்ளியகுருகே அவர்களின் ஒருங்கிணைப்பில், கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் படையணி தலைமையகத்தில் நடத்தப்பட்டது.

உபகரண பணிப்பாளர் நாயகமும் கொமண்டோ படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது, மறைந்த கோப்ரலின் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டை பூர்த்தி செய்வது தொடர்பாகவும், அவரது மனைவி சுயதொழில் ஒன்றை ஆரம்பிக்க தேவையான ஆதரவை வழங்குவது தொடர்பாகவும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.