Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

26th February 2026 09:15:54 Hours

கொமாண்டோ படையணி சேவை வனிதையரால் நிதி உதவி திட்டம்

தேவையுடைய கொமாண்டோ உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நிதியுதவித் திட்டம், கணேமுல்லை கொமாண்டோ படையணி தலைமையக அதிகாரவாணையற்ற அதிகாரிகள் உணவகத்தில் 2026 பெப்ரவரி 18 ஆம் திகதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன மற்றும் போர் கருவி பணிப்பாளர் நாயகமும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ். விக்ரமரத்ன ஆர்எஸ்பீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில், போர் கருவி பணிப்பாளர் நாயகமும் கொமாண்டோ படையணியின் படைத தளபதயுமான மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ். விக்ரமரத்ன ஆர்எஸ்பீ, கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. சமிந்தி விக்ரமரத்ன, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் எச்.டி.எல்.எஸ். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ, கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் பிரதித் தலைவியும் படையணி தலைமையகத்தின் பிரதி நிலைய நிர்வாகியுமான திருமதி. ரந்திமா பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், கொமாண்டோ படையணியின் ஏழு அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு தலா ரூ. 50,000/- நிதியுதவி வழங்கப்பட்டது.