19th February 2026 16:15:30 Hours
கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதாரி அனுபமா கமகே அவர்களின் தலைமையில், தப்போவ ஸ்ரீ விஜயராஜ விகாரையை, சுற்றியுள்ள பகுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் 2026 பெப்ரவரி 14 அன்று கண் பரிசோதனை மற்றும் மூக்குகண்ணாடி விநியோகிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் இலங்கை குடிமகனான திரு. உபுல் சமரசேகர அவர்கள் தாராளமாக நிதியுதவி வழங்கினார். மேலும் தொழில்நுட்ப உதவியை விஷன் கெய ஒப்டிகல்ஸ் (தனியார்) நிறுவனத்தின் தலைவர் திரு. தசந்த பொன்சேகா வழங்கினார்.
நிகழ்வில், கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தகுதியான 260 பொதுமக்களுக்கு மூக்குகண்ணாடிகள் வழங்கப்பட்டன. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.