19th February 2026 15:12:27 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவு 2026 ஜனவரி 5 ஆம் திகதி மஹரகம அபேக்ஷா வைத்திசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்கும் ஒரு நன்கொடை திட்டத்தை நடத்தியது.
இம்முயற்சி இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ். ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சச்சேதா ஹேவகே அவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது, வைத்திசாலையில் வைத்திய சிகிச்சை பெறும் நோயாளர்களின் தொடர்ச்சியான சிகிச்சை மற்றும் பராமரிப்பை ஆதரிக்கும் நோக்கத்துடன் ரூ. 300,000.00 பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இதற்கு இணையாக, தற்போது வைத்திய சிகிச்சையில் உள்ள ஒரு பெண் சிப்பாயின் நெருங்கிய உறவினருக்கும், ஒரு பெண் சிவில் ஊழியருக்கும் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.