18th February 2026 16:54:45 Hours
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவினால் 2026 பெப்ரவரி 05 அன்று இலங்கை இராணுவ போர் கருவி படையணியில் ஒரு நன்கொடை திட்டத்தை நடத்தியது.
அனைத்துப் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் அமைதி, செழிப்பு மற்றும் நல்வாழ்விற்காக ஆசீர்வாதங்களை வேண்டி, ருவன்வெலி மகா சேயவில் மத அனுஷ்டானத்துடன் இந் நிகழ்வு ஆரம்பமாகியது.
பின்னர், சிப்பாய்கள் மற்றும் அரசு ஊழியர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 21 பிள்ளைகளுக்கு பாடசாலை உதவி பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், "தித்வா" சூறாவளியால் பாதிக்கப்பட்ட 5 பணியாளர்களுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டதுடன், அதே நேரத்தில் இரண்டு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அத்தியாவசியப் பராமரிப்புப் பொருட்கள் வழங்கப்பட்டன. அத்துடன் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் இராணுவ உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.என். விஜேகோன் என்டிசீ ஏஏடிஓ மற்றும் இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிர்மலி விஜேகோன் ஆகியோர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டனர்.