11th February 2026 06:14:19 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ சேவை வனிதையர் பிரிவினர் 2026 பெப்ரவரி 05 அன்று தொம்பே ஆதார வைத்தியசாலையில் வைத்திய உபகரணங்கள் நன்கொடை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது, வைத்தியசாலை நோயாளிகளின் பராமரிப்பை ஆதரிப்பதற்காக இராணுவ சேவை வனிதையர் பிரிவு ஒரு சக்கர நாற்காலி, ஒரு பிஸ்டன் கம்ப்ரசர் நெபுலைசர், இரண்டு ஒக்ஸிஜன் ரெகுலேட்டர்கள், ஒரு ஒக்ஸிஜன் செறிவூட்டி, படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணைகளை நன்கொடையாக வழங்கியது.
இந் நிகழ்வில் வைத்திய அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.