Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

11th February 2026 06:12:34 Hours

78 வது சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்பாளர்களுக்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் சிற்றுண்டி வழங்கல்

2026 ஜனவரி 31 முதல் பெப்ரவரி 03 வரை நடைபெற்ற 78 வது சுதந்திர தின அணிவகுப்புக்கான ஒத்திகைகளில் பங்கேற்ற முப்படை வீரர்களுக்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவினர் பென்டெரா பிராண்ட்ஸ் (தனியார்) நிறுவனம் மற்றும் நெஸ்லே லங்கா (தனியார்) நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து சிற்றுண்டிகளை வழங்கியது.

பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, நியூடேல் பால் பொதிகள், மில்க் ஷேக் பாட்டில்கள் மற்றும் நெஸ்டமோல்ட் பானங்கள் உள்ளடங்களாக ஒத்திகை காலம் முழுவதும் தினமும் சுமார் 5,000 பானங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சித்திட்டம் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.