10th February 2026 11:19:08 Hours
இராணுவ புலனாய்வு படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ்.மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தில்ருக்ஷி மெதகொட அவர்களுடன் இணைந்து 2026 பெப்ரவரி 08 அன்று இராணுவ புலனாய்வு படையணியில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் நலம் விசாரித்தனர்.
இந்த விஜயத்தின் போது, குடும்பங்களுக்கு தலா ரூ.7,500.00 மதிப்புள்ள அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.
மேலும், இந் நிகழ்விற்கு அமைய இராணுவ புலனாய்வு படையணி படையலகுகளின் கட்டளை அதிகாரிகள் அந்தந்தப் பகுதிகளுக்குள் உயிரிழந்த போர் வீரர்களின் குடும்பங்களைச் சந்தித்து, தலா ரூ.7,500.00 மதிப்புள்ள உலர் உணவு பொதிகளை வழங்கினர்.