09th February 2026 12:01:51 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2026 ஜனவரி 31 அன்று கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் புத்தகங்கள் மற்றும் உலர் உணவு பொதிகள் நன்கொடையாக வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது இராணுவத்தினர் மற்றும் சிவில் ஊழியர்களின் மொத்தம் 1,072 பிள்ளைகள் ரூ. 2.5 மில்லியன் பெறுமதியான புத்தகப் பொதிகளைப் பெற்றனர்.
பின்னர், தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்காக கெமுனு ஹேவா படையணியில் ஒதுக்கப்பட்ட உலர் உணவு பொதிகள் கெமுனு ஹேவா படையணிகளின் கட்டளை அதிகாரிகளிடம் அடையாளமாக ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சித் திட்டம் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷிஹானி அபேவர்தன அவர்களின் வழிகாட்டுதலின் 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஏ. அபேவர்தன டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் பிள்ளைகள் கலந்து கொண்டனர்.