29th January 2026 15:41:46 Hours
இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் வழிகாட்டுதலின் கீழ் தை பொங்கல் கொண்டாட்டம் 2026 ஜனவரி 2026 இல் அனுராதபுரம், இப்பலோகம, காலி, தியத்தலாவ, பல்லேகல, மின்னேரியா, பனாகொட மற்றும் மெனிங் டவுன் ஆகிய இடங்களில் உள்ள விரு கெகுல பாலர் பாடசாலைகளில் மகிழ்ச்சியுடனும் கலாசார பெருமையுடனும் கொண்டாடப்பட்டது.
தைப் பொங்கலின் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் அறிமுகப்படுத்தியதுடன் விவசாயத்தின் மதிப்பு, நன்றியுணர்வு மற்றும் இயற்கையின் மீதான மரியாதை ஆகியவற்றை பிள்ளைகளுக்கு எடுத்துரைத்தனர்.
கொண்டாட்டங்களுக்கு வண்ணத்தையும் உற்சாகத்தையும் சேர்த்து, பிள்ளைகள் கோலம் வரைதல், சம்பிரதாய பால் பொங்கல், பொங்கல் வைத்தல், கலாசார நடனங்கள் மற்றும் சூரிய வழிபாடு ஆகியவற்றில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைகள் இளம் பங்கேற்பாளர்களிடையே கலாசார விழிப்புணர்வு, ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையைப் ஊக்குவிப்பதாகும்.