03rd February 2026 14:55:09 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் நலனுக்காக மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி 2026 ஜனவரி 28 ஆம் திகதி மருத்துவமனை வளாகத்தில் நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் போது, ஒரு பெரிய நடமாடும் யூவீ-ஒளி கிருமி நீக்கம் செய்யும் அலகு மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக நன்கொடையாக வழங்கப்பட்டது, மேலும் பல்கலைக்கழக மருத்துவமனையின் சத்திர சிகிச்சை துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் சந்தன ஆர். கருணாதிலக்க அவர்களிடம் சம்பிரதாயமாக ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடாத்தப்பட்டது.