31st January 2026 18:14:01 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 2026 ஜனவரி 29 அன்று ராகம ரணவிரு செவன புனர்வாழ்வு மையத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
இந்த விஜயத்தின் போது, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினால் ராகம ரணவிரு செவன புனர்வாழ்வு மைய பயன்பாட்டிக்கு அனைத்து போர் வீரர்களுக்கும் அத்தியாவசியப் பொருட் பொதிகளும், ஒரு அச்சுப்பொறி இயந்திரம் இரண்டு நீர் விநியோகிப்பான்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இந்த விஜயத்தின் போது அனைத்து போர்வீரர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷியாமா ஹெட்டிகே, சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.