30th January 2026 12:10:12 Hours
தித்வா சூறாவளியின் தாக்கத்தால் இராணுவ வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு அதன் அனர்த்த நிவாரண பணிகளின் மூன்றாம் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தது. உலர் உணவு பொதிகள் வழங்கல் 2026 ஜனவரி 20 அன்று படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் முன்னிலையில், 212 சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு உதவும் வகையில் அந்தந்த கட்டளை அதிகாரிகளுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சித்திட்டம் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி ஷிஹானி அபேவர்தன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மற்றும் கெமுனு ஹேவா படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஏ. அபேவர்தன டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.