30th January 2026 12:14:31 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவினால் அதன் ஓகிட் தாவர பண்ணை 2026 ஜனவரி 23 அன்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
புதிதாக நிறுவப்பட்ட ஓகிட் தாவர பண்ணை தோராயமாக 2000 ஓகிட் செடிகளை கொண்டுள்ளதுடன் மேலும் இதன் மூலம் மூன்று மாதங்களுக்குள் வருமானம் ஈட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் எதிர்கால நலன்புரி நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தி ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிலையான நிதி உருவாக்கும் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இராணுவ புலனாய்வு படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ்.மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ ஐஜீ, இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தில்ருக்ஷி மெதகொட, இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.