Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

30th January 2026 12:16:46 Hours

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் 33 வது ஆண்டு நிறைவு போர்வீரர்கள் நினைவேந்தலுடன் கொண்டாடல்

இராணுவ புலனாய்வுப் படையணி தனது 33வது ஆண்டு நிறைவை 2026 ஜனவரி 24 அன்று பெருமையுடன் கொண்டாடியது. தினத்தை முன்னிட்டு, கடமையின் போது உயிர் தியாகம் செய்த துணிச்சலான போர் வீரர்களை கௌரவிக்கும் வகையில் போர் வீரர்கள் நினைவு விழா வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

விழாவின் ஒரு பகுதியாக, இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் குடும்பங்களுக்கு நன்றியுணர்வு, நினைவு மற்றும் தொடர்ச்சியான ஆதரவின் அடையாளமாக தலா ரூ.7,500 மதிப்புள்ள வவுச்சர்களை வழங்கியது.

இந்த நிகழ்வில் இராணுவ புலனாய்வு படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ்.மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ ஐஜீ, இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தில்ருக்ஷி மெதகொட, இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.