30th January 2026 12:18:23 Hours
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் வழிகாட்டுதலின் கீழ், மார்பகப் புற்றுநோய் தடுப்பு, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையால் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதுடன் இதில் பங்கேற்பாளர்கள் மார்பகப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிதல், ஆபத்து காரணிகளைப் புரிந்துகொள்வது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறைகளைப் பின்பற்றுவது குறித்து நிபுணர் வழிகாட்டுதலைப் பெற்றனர்.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிர்மலின் விஜேகோன், இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் பெண் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.