29th January 2026 09:44:21 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதைர் பிரிவின் தலைவி திருமதி பீஎன்கே டி சில்வா அவர்களின் தலைமையில், 306 டி2 கலுபோவில லயன்ஸ் சர்வதேச கழகத்தின் அனுசரணையில் 2026 ஜனவரி 24, அன்று நாவின்ன இசிபதனராம விகாரையில் இரத்த தான வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் எம்கேஎஸ்எஸ் டி சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.மேலும் தானமாக வழங்கப்பட்ட இரத்தம் புற்றுநோய் நோயாளர்களுக்கும் அதன் முக்கிய சேவைகளை ஆதரிப்பதற்காக மஹரகம அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.