Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

29th January 2026 09:47:12 Hours

பொறியியல் சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி பதவியேற்பு

திருமதி அருணி சந்திரசேகர அவர்கள் பொறியியல் சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் 17வது தலைவியாக 2026 ஜனவரி 19, அன்று படையணி தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு சம்பிரதாய நிகழ்வின் போது முறையாகப் கடமைகளை பொறுப்பேற்றார். அவர் தலைவியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் பொறியியல் சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் பொருளாளர், செயலாளர் மற்றும் பிரதி தலைவியாக தனது கடமைகளை நிறைவேற்றி அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார்.

வருகை தந்த திருமதி சந்திரசேகர அவர்களை பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரியால் அன்புடன் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் வைகேஎஸ் ரங்கிக்க பீஎஸ்சீ பீடிஎஸ்சீ மற்றும் பொறியியல் சேவைகள் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எம்எஸ்டி பெரேரா யூஎஸ்பீ பீடிஎஸ்சீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

சம்பிரதாயத்திற்கமைய புதிய தலைவி உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு கடமைகளை பெறுப்பேற்றார்.கடமைகளை பெறுப்பேற்ற புதிய தலைவிக்கு சிரேஷ்ட பெண் அதிகாரிகள் மற்றும் பெண் அதிகாரிகள் தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.