Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

28th January 2026 09:14:42 Hours

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையரால் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட படைவீரர்களுக்கு சமையலறைப் உபகரணங்கள் நன்கொடையாக வழங்கல்

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையரால் 2026 ஜனவரி 24 தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இரண்டு படைவீரர்களுக்கு சமையலறைப் உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. தொம்பேகொடை இலங்கை இராணுவ போர் கருவி படையணி தலைமையகத்தில் நடைபெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது திருமதி நதீஷா உயங்கொடகே அவர்கள் இந்த நன்கொடையை வழங்கினார்.

இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிர்மலின் விஜேகோன், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.