27th January 2026 14:18:47 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவினால் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி படையினரின் பிள்ளைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அனுராதபுரம் 3 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி இல் 2026 ஜனவரி 15 அன்று புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வை நடத்தியது.
இந் நிகழ்வில் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்ச்சி பெற்ற 32 பேருக்கு தலா ரூ.10,000 பரிசும், பாடசாலை பைகள், புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களும் வழங்கப்பட்டதுடன் க.பொ.த. சாதாரண தரத்தில் ஒன்பது 'ஏ' சித்திகளைப் பெற்ற இரண்டு மாணவர்களுக்கு தலா ரூ.20,000 உதவி தொகையும், பாடசாலை உதவி பொருட்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவச் செயலாளரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. இரோஷினி பெர்னாண்டோ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.