23rd January 2026 11:19:04 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான செயற்குழு கூட்டம் 2026 ஜனவரி 20 அன்று இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
கூட்டத்தின் தொடக்கத்தில், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி தர்ஷனி யஹம்பத், முந்தைய கூட்டத்தின் அறிக்கையினை வாசித்ததுடன் அதே நேரத்தில் வரவு செலவு அறிக்கையை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பொருளாலர் மேஜர் ஏ.எஸ்.என். ஹத்துருசிங்க வழங்கினார். அதன் பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி இராணுவ வீரர்களின் நலனுக்காக புதிய நலன்புரி திட்டங்களை அறிமுகப்படுத்தியதுடன் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் நலன்புரி திட்டங்களின் பயனுள்ள மற்றும் செயற்திறனை தொடர்ச்சியை கோடிட்டுக் காட்டினார்.
இராணுவ வீரர்களின் நலனுக்காக நிதி திரட்டும் நோக்கத்துடன், புதிய திட்டங்களைத் தொடங்குவதற்காக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரதான கணக்கிலிருந்து படையணி சேவை வனிதையர் பிரிவிற்கு ரூ. 500,000.00 வட்டியில்லா கடனை வழங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, இலங்கை பீரங்கிப்படையணி, விஷேட படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணிகளுக்கு தனித்தனியாக ரூ. 500,000.00 வீதம் ரூ. 1,500,000.00 கடன்கள் வழங்கப்பட்டன. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியரால் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியரிடம் காசோலைகள் வழங்கப்பட்டன.
மேலும், வீட்டுவசதித் திட்டத்தின் இறுதித் தவணையான ரூ. 500,000.00, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியை சேர்ந்த சிப்பாய் எச்.எஸ். ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்டதுடன் அவர் முந்தைய குழு கூட்டங்களில் வீட்டுவசதி நிதி உதவியைப் பெற்றிருந்தார்.
அதன்பிறகு, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, ரூ. 74,029.05 மதிப்புள்ள 16 x KENT GRAND வகை நீர் சுத்திகரிப்பு அலகுகள் மொத்தம் ரூ. 1,184,464.80 செலவில் வழங்கப்பட்டன.
இறுதியாக, தேநீர் விருந்து மற்றும் குழு படம் எடுத்தலுடன் கூட்டம் நிறைவடைந்தது. படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.