Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

23rd January 2026 11:10:42 Hours

கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் முன்னாள் தலைவியர்களுக்கான பாராட்டு விழா

கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் முன்னாள் தலைவியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையை கௌரவிக்கும் விழா 2026 ஜனவரி 17 அன்று கணேமுல்ல கொமாண்டோ படையணி அதிகாரிகள் விடுதியில் நடைபெற்றது.

முன்னாள் தலைவியர்கள் திருமதி இந்திராணி சந்திரவன்ச, திருமதி சுஜீவா நெல்சன், திருமதி ரொசெட்டா நுகீரா, திருமதி அனுஜா டி சில்வா, திருமதி சுபாஷினி ராஜபக்ஷ மற்றும் திருமதி நிமாலி ரணதுங்க ஆகியோர் தங்கள் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வின் போது, அவர்களின் பதவிக்கால நினைவுகள் பகிர்ந்து கொள்ளப்பட்ட அதே வேளையில், பாராட்டுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

விழாவிற்கு வண்ணம் சேர்க்கும் விதமாக, இலங்கை இராணுவ கலாசார குழுவினரால் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து தேநீர் விருந்துபசாரமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன, போர் கருவி பணிப்பாளர் நாயகமும் கொமாண்டோ படையணி படைத்தளபதியுமாகிய மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ். விக்ரமரத்ன, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.