Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

23rd January 2026 11:12:58 Hours

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் ரணவிரு செவன புனர்வாழ்வு மையத்திற்கு விஜயம்

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 2026 ஜனவரி 20 ஆம் திகதி ராகம ரணவிரு செவன புனர்வாழ்வு மையத்திற்கு நலன்புரி முயற்சியின் ஒரு பகுதியாக வருகை தந்தனர்.

இவ் விஜயத்தின் போது போர்வீரர்களுக்கு பழக்கூடைகள் வழங்கப்பட்டதுடன் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவினால் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், அவர்களின் அன்றாட தனிப்பட்ட தனிப்பட்ட தேவைகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு உதவுவதற்காக அத்தியாவசிய சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. நீலாங்கனி சமரதிவாகர, நிதி முகாமைத்துவ கிளையின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.டி.எம்.எல் சமரதிவாகர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.