22nd January 2026 09:10:02 Hours
இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் உறுப்பினர்கள் 2026 ஜனவரி 15 அன்று முல்லேரியா தேசிய மனநல வைத்தியசாலையின் 05வது வார்டுக்கு விஜயம செய்தனர்.
நிகழ்ச்சியின் போது, இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் மதிய உணவு, தேநீர் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கியதுடன் போர்வீரர்களின் உற்சாகத்தை மேம்படுத்த இலங்கை கவச வாகன படையணி காலிப்சோ குழுவுடன் ஒரு பொழுதுபோக்கு இசை அமர்வை நடத்தினர். ஒவ்வொரு போர்வீரர்களின் இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்களிடமிருந்து பரிசுப் பொதிகளை பெற்றனர்.
மேலும், இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் வார்டுக்கு ரூ.10,000.00 மதிப்புள்ள புத்தக அலமாரியை நன்கொடையாக வழங்கினர்.