20th January 2026 22:19:43 Hours
அண்மையில் இடம்பெற்ற 'தித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவினால் படையினரின் பிள்ளைகளின் கல்வியை ஆதரிப்பதற்காக ஒரு சிறப்பு நலத்திட்டத்தை முன்னெடுத்தனர். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, 6 முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான 145 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதற்கமைய 28 பிள்ளைகளுக்கு அடையாளமாக விநியோகிக்கும் விழா 2026 ஜனவரி 18 அன்று இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி குமாரி பல்லேகும்புர அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த முயற்சி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களின் தீவிர பங்களிப்பு மற்றும் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளின் ஆதரவுடன். ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்களின் கல்வித் தேவைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக அத்தியாவசிய பாடசாலை பொருட்கள் மற்றும் பாடசாலை சீருடை அடங்கிய நன்கொடைப் பொதிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் படையணியின் படைத் தளபதி, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், பிரதி நிலைய தளபதி, அத்துடன் படையணியின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.